தூய்மையான இலங்கை நிகழ்வு திட்டம்

 


ஹஸ்பர்

திருகோணமலை,தம்பலகாமம் மீரா நகர் பகுதியில் "தூய்மையான இலங்கை" எனும் தொனிப்பொருளின் கீழ் மரநடுகை நிகழ்வு இடம் பெற்றது.

 தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட குறித்த நிகழ்வானது இன்று (03) காலை மீரா நகர் ஜூம்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இடம் பெற்றது. 

இளைஞர் சேவை மன்றம் இதனை ஏற்பாடு செய்திருந்ததுடன் பள்ளிவாயல் வளாகத்தினுள் மரநடுகை இடம் பெற்றது. பசுமையான சூழலை உருவாக்கும் நோக்கில் இத் திட்டம் நாடு பூராகவும் நடை முறைப்படுத்தப்படுகின்றது.

இதில் தம்பலகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பண்டார மற்றும் இளைஞர் சேவை அதிகாரி ஜாபிர் உட்பட பொது மக்கள்,இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.