SY Production & Media நிறுவனத்தினால் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு


SY Production & Media நிறுவனத்தினால் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு


வளர்ந்து வரும் சிறுவர்களின் திறமைகளை வெளிக்காட்டும் முகமாக  SY production & Media "பிஞ்சு மனம் இது திறமையின் இல்லம்" என்ற நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

அதனடிப்படையில் இதில் 70ற்கும் மேற்பட்ட மாணவர்கள் கிராத், கஸீதா, ஹதீஸ்,
கதைகள் போன்ற நிகழ்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கான 
சான்றிதழ்கள் அண்மையில் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதோடு, 30 ஜூலை ஹெம்மாதகமையைச் சேர்ந்த முஸாப் இப்னு அப்துல்லாஹ்விற்கு  இச் சான்றிதழ் Sy production & media நிறுவனத்தின் பணிப்பாளர் சில்மியா யூசுபினால் தெஹிவளையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

"பிஞ்சு மனம் இது திறமையின் இல்லம்" என்ற நிகழ்ச்சியில் பங்கு பற்றி திறமைகளை வெளிக்காட்டிய அனைத்து 70 ற்கு மேற்பட்ட  மாணவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதோடு,
இந் நிகழ்வின் பணிப்பாளர் சில்மியா யூசுப், பிரதம அதிதிகளான சட்டத்தரணி மற்றும் SDJF இன் பணிப்பாளர் ஆசாத், கொழும்பு டைம்சின் பிரதம ஆசிரியர் ரசூல்தீனுக்கும் பங்குபற்றிய குழந்தைகளின் பெற்றோர்களுக்கும்,இதற்காக உதவிசெய்த சில உறவுகளுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதில் இந் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.