31,600 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு


2021/22 மகா பருவத்திற்கான அறுவடை தற்போது நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்த பருவத்தில் இதுவரை 31,600 மெற்றிக் தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அந்தவகையில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து அதிகளவில் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் நீல் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.

நாட்டு நெல் ஒரு கிலோ 90 ரூபாவுக்கும், சாம்பா நெல் 92 ரூபாவுக்கும், கீரி சம்பா 95 ரூபாவுக்கும் நெல் சந்தைப்படுத்தல் அதிகாரசபையினால் கொள்முதல் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.