பேலியகொடை புதிய மெனிங் சந்தை திறப்பு.

 


பேலியகொடை புதிய மெனிங் சந்தையை மொத்த வர்த்தகத்திற்காக நாளை (14)ம் திகதி திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை பிற்பகல் 4.00 மணிமுதல் நள்ளிரவு 12.00 மணிவரை அங்கு வர்த்தக நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக மெனிங் பொது சங்கத்தின் தலைவர் லால் ஹெட்டிகே தெரிவித்தார்.

நெரிசல் இல்லாமல் வர்த்தகத்தை முன்னெடுப்பதற்காக மொத்த விற்பனையாளர்கள் மட்டுமே தங்கள் விவசாய விளைபொருட்களை அந்த நாளில் கொண்டு வருமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய மொத்தமாக அனுப்ப வேண்டாம் என்றும் சாதாரண அளவை அனுப்புமாறு அனைத்து விவசாயிகளிடமும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ,தமக்கு அண்மையில் மீன் சந்தை உள்ளதால் குறித்த மொத்த வியாபார நடவடிக்கைகளை மாலை நேரத்தில் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.