(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
யு.எஸ்.எப். ஸ்ரீலங்கா அமைப்பு சாய்ந்தமருது தொழிற்பயிற்சி நிலையத்துடன் (SLYC) இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஆங்கில பாடத்துக்கான இலவச கருத்தரங்கு சாய்ந்தமருது இளைஞர் தொழிற்பயிற்சி நிலையத்தில் எதிர்வரும் (29) சனிக்கிழமை காலை 9 மணி முதல் 2 மணி வரை இடம்பெறும்.
'கல்விக்கு கரம் கொடுப்போம்' எனும் தொனிப்பொருளில், இடம்பெறும் இக்கருத்தரங்கில், இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை எதிர்வரும் பெப்ரவரி 07 ஆம் திகதி எதிர்நோக்கவுள்ள மாணவ, மாணவிகள் அனைவரும் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இந்நிகழ்வில், ஆங்கிலப்பாட விரிவுரையாளர்களான எம்.பி நௌஷாத், எம்.ஆர்.எம்.சதீம், ஏ.எல்.எம்.சிஹாம், எம்.எப். ஆசீர் அஹமட் ஆகியோர் வளவாளர்களாக் கலந்து கொள்ளவுள்ளனர்.
