தென்னங் கன்றுகள் நடும் தேசிய வேலைத்திட்டம் அட்டாளைசேனையில் அங்குரார்ப்பணம்.

"வீட்டுக்கு வீடு கப்ருக" எனும் 40 இலட்சம் தென்னங்கன்றுகள் நடும் தேசிய வேலைத்திட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஜெமீலா ஹமீட் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 

இதற்காண மரக்கன்றுகள்  கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்களினால் அட்டாளைச்சேனை அரபா  வட்டாரத்துக்கு வழங்கி வைக்கப்பட்டது. 

ஊடகவியலாளர் ஹமீட்  தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்விற்கு கௌரவ அதிதியாக   பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் கிழக்கு மாகாண இணைப்பாளரும் ஊடகவியலாளருமான  றிசாத் மற்றும் சட்டத்தரணி பைரூஸ் அவர்களும் கலந்து கொண்டார்கள். 

மேலும் நாட்டில் தென்னை பயிர்ச்செய்கையை அதிகரிக்கும் நோக்கில் பிரதேச மக்களுக்கு தென்னங் கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

-சப்ராஸ்-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.