இலங்கையில் வாழக்கூடிய ஒவ்வொருவரும் நாம் இலங்கையர்கள் என்ற மனநிலையோடு செயற்பட வேண்டும்.

 


2020 இல் பிரதேசவாரியாக நடாத்தப்பட்ட ஐந்தாவது தேசிய இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் இலங்கையில் அதிகூடிய வாக்குகளை பெற்றார் பேருவளை அஹ்மத் சாதிக்.

இவர் வெளிவிவகாரங்கள் மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சராக இளைஞர் பாராளுமன்றத்தில் நியமிக்கப்பட்டார்.

ஐந்தாவது தேசிய இளைஞர் பாராளுமன்றத்தினுடைய முதலாவது அமர்வில் இவரது கன்னி உரையில்   பிரதான கருப்பொருளாக "தேசிய இளைஞர் கொள்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இக்கருப்பொருளின் அடிப்படையில் "சமாதானமும் நல்லிணக்கமும் அத்தோடு வெளிவிவகாரம் மற்றும் ராஜாதந்திர உறவுகள்" ஆகிய விடயங்கள் உள்வாங்கப்பட்டிருந்தமையும் முக்கிய அம்சமாகும்.


மேலும் அங்கு தொடர்ந்தும் உரையாட்டிய அவர் இலங்கையில் தேசிய ரீதியில் சிறந்த நல்லிணக்கத்தையும் சமூக ஒற்றுமையையும் வளர்த்துக்கொள்ள அரசினால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்நாட்டில் வாழக்கூடிய ஒவ்வொரு நபரும், இளைஞர்களும் நாம் இலங்கையர்கள் என்ற மனநிலையோடு செயற்பட வேண்டும் என்பதே இதன் பிரதான நோக்கமாகும் என்றார். 

மேலும் வெளிவிவகாரம் மற்றும் ராஜாதந்திர உறவுகள் அமைச்சின் கீழ் இளைஞர் பாராளுமன்றம் மற்றும் பல்கலைக்கழகங்களை அடிப்படையாக வைத்து இளைஞர்களை ஒன்று சேர்க்கக்கூடிய வகையிலான மாதிரி ஐக்கிய நாடுகள் சபைகளின் (Model United Nations) செயற்பாடுகளானது பிற நாடுகளில் உள்ளதை போன்று எதிர்காலத்தில் இலங்கையிலும் ஊக்குவிக்கப்பட்டு உருவாக்கப்படல் வேண்டும் என  இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகாரங்கள் மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சர்  அஹ்மத் சாதிக் தெரிவித்தார்.

அந்தவகையில் 2020 ம் ஆண்டு நடைபெற்று முடிந்த இத் தேசிய இளைஞர் பாராளுமன்றத்தில்  360   உறுப்பினர்களில் முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்

40 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.