உப்பு கொள்வனவு செய்வதற்கு மக்கள் முண்டியடிப்பு.

 நாட்டில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என வெளியாகிய செய்தியை தொடர்ந்து மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் இன்றைய தினம் (3) காலை கறி உப்பினை கொள்வனவு செய்ய மக்கள் முந்தியடித்துக் கொண்டனர்.

எனினும் மக்களுக்கு தேவையான உப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகியுள்ள எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பலினால் கடலில் இரசாயன பொருட்கள் கலந்துள்ளதாகவும், நாட்டில் உப்பு உற்பத்தியில் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலையத்தில் இன்று (3) காலை முதல் பொதி செய்யப்பட்ட அயடின் கலந்த உப்பு பக்கட்டுக்களை கொள்வனவு செய்ய மக்கள் முந்தியடித்துக்கொண்டு வந்ததாகவும், மக்கள் தமக்கு தேவையான உப்பு பக்கட்டுக்களையும் கொள்வனவு செய்து சென்றுள்ளனர்.

எனினும் மன்னார் மாவட்ட மக்களுக்கு தேவையான உப்பு போதிய அளவு உள்ளதாகவும் மக்கள் இவ்வாறு முந்தியடித்துக்கொண்டு உப்பினை கொள்வனவு செய்ய வேண்டிய தேவை இல்லை எனவும் தற்போது அதிக அளவு உப்பு கையிருப்பில் உள்ளதோடு, பெரும் போக உப்பு உற்பத்தியும் தற்போது இடம் பெற்று வருவதாக மன்னாரில் உள்ள மாந்தை உப்பு உற்பத்தி நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.