கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்கள் ஒட்டப்படும்.


கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் வாகனங்களுக்கு விசேட ஸ்டிக்கர்களை ஒட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனைத் தெரிவித்துள்ளார்.

கம்பஹா, பாணந்துறை, நுகேகொடை, கல்கிஸ்ஸை மற்றும் வத்தளை ஆகிய இடங்களில் வைத்து இந்த ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன.

இந்த ஸ்டிக்கர்கள் ஒருநாள் மாத்திரமே செல்லுபடியாகும்.

ஒரே வாகனம் பலமுறை சோதனைக்கு உள்ளாக்கப்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இன்று ஒட்டப்படும் ஸ்டிக்கர் இன்று மட்டும் செல்லுபடியாகும் என்பதோடு, நாளை வேறொரு ஸ்டிக்கர் ஒட்டப்படும் என்றும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் விசேடமான சந்தர்ப்பங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தாலும் சில வாகனங்கள் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

அத்துடன் போலியான தகவல்களை வழங்குகின்றவர்களின் வாகனங்களுக்கு இந்த ஸ்டிக்கர் ஒட்டப்படாது என்றும் காவற்துறை ஊடகப்பேச்சாளர் எச்சரித்துள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.