புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க புத்தளம் நகர சபை பதில் தலைவர் குமார அவர்களின் ஏற்பாட்டில் புத்தளம் ஹைராத் பள்ளியிலிருந்து அம்மன் கோவில் சந்தி வரையான கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ் வேலைத்திட்டம் மேகரை வழியாகவும் மணல் தீவு வழியாகவும் சுமார் மூன்று கிலோ மீட்டர் வரையான கால்வாய் சுத்தம் செய்யும் பணிகள் புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபை இவைகளுடன் இணைந்து புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் செய்கின்றார்கள்.
அத்துடன் இக்கால்வாயை 2.5M அகலத்திற்கு கொங்கிரீட் அமைக்கும் வேலைத் திட்டத்தை உடனடியாக ஆரம்பிக்குமாறு பெருந்தெருக்கள் திணைக்கள பொறியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இனிவரும் காலங்களில் நகரசபை, பிரதேச சபை தலைமைகளும் அதன் உறுப்பினர்களும் தன்னுடன் இணைந்து செயல்படும் பட்சத்தில் இன்னும் ஓரிரு வருடங்களில் புத்தளத்தின் அனைதத்து பாதைகளையும் கார்பெட் இட்டு வெள்ள பாதிப்பு மற்றும் நுளம்பு பாதிப்பற்ற பிரதேசமாக தன்னால் ஆக்க முடியும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எடுத்துரைத்தார்.




