ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், ''ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் 9,209 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
"இதனைத் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 29,54,309 ஆக அதிகரித்துள்ளதுடன் ஈரானில் இதுவரை 80,813 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் இதில் 3,852 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுள் ஈரானும் ஒன்று. ஈரானில் 3% பேருக்கு மட்டுமே இதுவரை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஈரானில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால், அதனைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதோடு தடுப்பூசிகள் செலுத்தும் பணியையும் அதிகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்..

