ச‌முர்த்தி இல்லாத‌வர்க‌ளுக்கும் ரூ 5000 வழங்க கோரிக்கை


கொரோனா முட‌க்க‌ம் கார‌ண‌மாக‌ அர‌சாங்க‌ம் 5000 ரூபா கொடுப்ப‌ன‌வை வழங்குவதை நாம் பாராட்டுவ‌துட‌ன் மேலும் ப‌ல‌ ஏழை மக்கள் உண்ண உணவில்லாமல் சிரமப்படுவ‌தால் ச‌முர்த்தி இல்லாத‌ ம‌க்க‌ளுக்கும் 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும்ப‌டி ஐக்கிய‌ காங்கிர‌ஸ் (உல‌மா) க‌ட்சி கோரிக்கை விடுத்துள்ள‌து.

இது ப‌ற்றி ஐக்கிய காங்கிரஸ் (உலமா) கட்சியின் உயர்பீட உறுப்பினரும் தேசிய கொள்கை ப‌ர‌ப்புச் செயலாளருமான மௌலவி முஹம்மத் ஸப்வான் விடுத்துள்ள‌ அறிக்கையில் தெரிவித்துள்ளதாவ‌து,

பயணக்கட்டுப்பாடு காரணமாக மக்கள் ப‌ல‌ர் த‌ம் தொழில்க‌ளை இழ‌ந்து உண்ணவில்லாமல் சிரமப்படுவதால் அரசாங்கத்தினால் திட்டமிட்டவாறு 5000 ரூபா கொடுப்பனவினை தாமதமின்றி வழங்கும்ப‌டி கோருகின்றோம்.

கொரோனா வைரஸ் பேரழிவை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசு ம‌க்க‌ள் ந‌ல‌ன் க‌ருதி பயணக்கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆனாலும் இதனால் அன்றாடம் தொழிலுக்கு செல்வோரின் வருமானம் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள‌து.


இதனை கவனத்திற்கொண்டு அரசு பயணக்கட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டவர்களுக்கென 5000 கொடுப்பனவு வழங்க திட்டமிட்டு அதன் முதற்கட்டமாக சமுர்த்தி நிவாரணம் பெற்றுவரும் குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவினை வழங்கியது.

எனினும் சமுர்த்தி நிவாரணம் பெறாதவர்களுக்கு கொடுப்பனவினை பெற தற்சமயம் மிகவும் தகுதியான நிலையில் இருப்போருக்கு அக்கொடுப்பனவு வழங்கப்படவில்லை. நாட்டில் நிலவுகின்ற இந்த அசாதாரண சூழ்நிலையில் அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் வாடுகின்ற எத்தனையோ ப‌ல‌ ச‌முர்த்திக்கு அப்பால் ஏழை குடும்பங்கள் உள்ளன.

பயணக்கட்டுப்பாடு காரணமாக தமது தொழிலை இழந்து நிற்கும் அன்றாட கூலி தொழிலாளிகள், மற்றும் சுய தொழில்களில் ஈடுபடுவோர் அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பொருளாதாரத்தை திரட்டிக்கொள்ள முடியாமல் செய்வதறியாது தினந்தோறும் அரசியல்வாதிகளையும் அரச அதிகாரிகளையும் தொடர்புகொண்டு தமது பிரச்சனைகளை கூறி வருகின்றனர். இருப்பினும் அவர்களின் தேவைகள் பூர்த்தியான பாடில்லை. இதற்கான ஒரே தீர்வு: அரசினால் திட்டமிடப்பட்டவாறு உடன் அமுலாகும் வகையில் அர‌ச‌ ஊழிய‌ர், வ‌ருமான‌வ‌ரி வ‌ரி செலுத்தும் ப‌ண‌ம் ப‌டைத்தோர் த‌விர‌ ஏனைய‌ அனைவ‌ருக்கும் 5000 கொடுப்பினை மீண்டும் வழங்க உரிய தரப்பினருக்கு உத்தரவிடும் ப‌டி அர‌சை கோருகிறோம்.

Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.