வாஸ், இசுரு உதனா மற்றும் சிரான் பெர்னாண்டோ ஆகியோருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை டாக்காவில் பங்களாதேஷுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டிக்கு முன்னதாக இலங்கை அணியின் வேகப் பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் உட்பட இரண்டு வேகப் பந்து வீச்சாளர்களுக்கு கோவிட் -19 பரிசோதனையில் கொவிட் தொற்று உறுதி செய்துள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளுக்காக இலங்கை அணி காத்திருக்கிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை நேரப்படி மதியம் 12:30 மணிக்கு ஆரம்பமாக இருக்கும் முதல் ஒருநாள் போட்டி இப்போது அட்டவணைப்படி நடை பெறுமா என உறுதியாக முடியாது.

