சர்வதேச தேநீர் தினத்தை முன்னிட்டு, ஓமானில் இலங்கை தூதரகம் அல் மீரா ஹைப்பர் சந்தையில் “சிலோன் கருவப்பட்டை தேயிலை” என்ற புதிய தர அடையாளத்தை (Brand) அறிமுகப்படுத்தியுள்ளது.
"இலங்கையில் வணிக தொடக்கங்களை மேம்படுத்துவதற்கும், இலங்கை தயாரிப்புகளின் புதிய பிராண்டுகளை ஓமான் சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கும் நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளில் இதுவும் ஒன்றாகும்" என மஸ்கட்டில் வதியும் இலங்கை ஸ்தானிகர் அமீர் அஜ்வத் தெரிவித்தார்.
சர்வதேச தேநீர் தினத்தை முன்னிட்டு இதன் பங்கேற்பாளர்கள் மத்தியில் இலங்கை தேயிலை நிலையத்திலிருந்து “சிலோன் தேயிலை” மற்றும் வடிவமைக்கப்பட்ட Face mask போன்றவைகள் விநியோகிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடதக்கது.


