அகில இலங்கை புத்தாக்குனர் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன்இரண்டாம் சுற்றோடு இணைந்த அரை இறுதி சுற்றுக்குத் தெரிவு


அகில இலங்கை புத்தாக்குனர் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன்  அப்துல் ஹபீஸ் சனூஸ் இரண்டாம் சுற்றோடு இணைந்த அரை இறுதி சுற்றுக்குத் தெரிவு

கொழும்பு மியூசியஸ் கல்லூரி மற்றும் ஆசிய பசுபிக் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (APIIT) இணைந்து  அகில இலங்கை ரீதியாக பாடசாலை மாணவ இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான போட்டி ஒன்றை அண்மையில் நடாத்தி இருந்தது. (Young Inventors Club of Musaeus College. All - Island inter - school inventors exhibition and competition instinctus' 20).


இந்த போட்டியில் முதலாவது சுற்றுக்கு அகில இலங்கை ரீதியாக 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து பங்குபற்றி இருந்தனர். அவர்களில் 18 மாணவர்கள் இரண்டாம் சுற்றோடு இணைந்த அரை இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

18 மாணவர்களில் ஒருவராக கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும் மாணவனான அப்துல் ஹபீஸ் சனூஸ் இந்தப் போட்டியில் தனது கோவிட் -19 உடன் தொடர்பான புதிய கண்டுபிடிப்பை சமர்ப்பித்து அரை இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாணவன் சாய்ந்தமருதைச் சேர்ந்த டாக்டர் சனூஸ் காரியப்பர் - டாக்டர் கரீமா சனூஸ் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வராவார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.