கொரோனா தொற்று காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இது கொரோனாவால் பதிவான முதலாவது பொலிஸ் உத்தியோகத்தரின் மரணம் என சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
மொனராகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய 59 வயதான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், இந்த வருடத்துடன் ஓய்வுபெற இருந்துள்ள நி லையில் அண்மையில், நெஞ்சு வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதன்போது அவருக்கு முன்னெடுக்கப்பட்ட PCR பரிசோதனைகளின்போதே அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையிலேயே அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.