இரத்தினபுரி கலபட தமிழ் வித்தியாலயத்தில் இலங்கை திருநாட்டின் 73 வது சுதந்திர தின விழா வெகு விமர்சையாய் அதிபர் கே.தினேஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது.
பாடசாலை வளவில் நடைபெற்ற இந்நிகழ்வில் கோவிட்கால சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டதுடன் சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாய் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் மேடையேறின.
சிறிய பாடசாலையாய் இருப்பினும் அதிபரின் அயரா உழைப்பிலும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பிலும் இ/கலபட தமிழ் வித்தியாலயம் மிளிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தகவல் -பின்த் அமீன்