சுதந்திரம்🇱🇰🕊️

சுதந்திரம்🇱🇰🕊️

Binth ameen, Tr (BA) seusl



சுதந்திரம் எல்லோருக்கும் இயற்கையாகவே தேவைப்படுமொன்று🐣.சில பறவைகள் சிறைப்பட்டு கூண்டில் இருக்கும் போது அதன் பார்வை ,ஏக்கம் எம்மை கவலையடையச் செய்யும் .எப்படியாவது திறந்துவிட வேண்டும் என்ற எண்ணம் அப்போது  எம்மில் நிழலாய் ஓடும்🕊️. நம் நாடும் முன்னர் வெளிநாட்டவரால் சிறைப்பட்டே இருந்தது.அப்போது நம் வளம், நிலம் அத்தனையும் அவர்களுக்கே உரித்தாயிற்று🏞️. எம் நாட்டைக் கொண்டு அவர்கள் பணமும், பொருளும் சம்பாரித்துக்கொண்டார்கள்💰.

இலங்கை மக்களின் ஒற்றுமையும் அர்ப்பணிப்பும் சுதந்திரத்துக்கு வழிகோலியது🇱🇰.நம் நாடு நமக்கே மீண்டும் உரித்தானது.அப்போதுதான் எமக்குள்  தேசிய உணர்வு  மலர்ந்து   நாட்டுப்பற்று வேரூன்றியது♥️.

அன்று ஒன்றுபட்டதால் ஒருநாட்டையே உயிர்ப்பித்தோம்☸️🕉️☪️✝️.

இன்றும் ஒன்றுபடுங்கள் 

இப்போதே ஒன்றாயிருங்கள் ☺️

உலகை வெல்வதற்கும்  அச்சுறுத்தல்களைbஅழிப்பதற்கும் ஒன்றுபடலே ஒளியாயிருக்கும்🌈

நாட்டை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் நம் கண்ணாய் நேசித்து ஜாதி மதம் பாராமல் ஜொலிக்கச்செய்வதை நோக்காய் கொண்டு இனிமேலாவது செயற்படுவோமாக😊

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.