சில்மியா யூசுப்
இலங்கை நாட்டு அனைத்து மக்களுக்கும் சேவை செய்வதற்கும் சகோதர நாடுகளுடன் நட்புறவை பேணி வலுப்படுத்துவதற்கும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு தீவிரமான ஆர்வமும், குறிக்கோள்களும் இருப்பதாக பங்களாதேஷின் புதிய இலங்கை உயர் ஸ்தானிகர் தாரெக் எம்.டி.அரிபுல் இஸ்லாம் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், ஜனாதிபதி மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தனது இலக்குகளை செயல்படுத்தவும் அர்ப்பணிப்புடன் இருக்கின்றார்.
"தற்போதைய கொவிட்19 நெருக்கடியிலிருந்து மக்களை விடுவிப்பதற்காக நாட்டின் விவசாயத் துறையின் அபிவிருத்தியை முன்னெடுக்கவும்,
அடிமட்டத்திலிருந்து இதுபோன்ற முன்னேற்றங்கள் கிராமவாசிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவும் என்று தெரிவித்தார்.
அதே போன்று
"சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதில் ஜனாதிபதி ஆர்வமாக இருக்கின்றார் ஏனெனில் இந்த துறையின் வீழ்ச்சியின் தாக்கத்தால் சுமார் மூன்று மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர், எனவும்,
"தகவல் தொழில்நுட்பம், வேளாண்மை, உயர்கல்வி, பிராந்திய ஒத்துழைப்பு, கப்பல் கட்டிடம் போன்ற துறைகளிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப அறிவைப் பரிமாறிக் கொள்வதிலும் இலங்கையுடன் ஒத்துழைக்க நாங்கள் தயாராக உள்ளோம் எனவும், தகவல் தொழில்நுட்ப அவுட்சோர்சிங்கில் பங்களாதேஷ் இரண்டாவது பெரிய நாடு என்றும், பெரிய அளவிலான காய்கறி மற்றும் அரிசி உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.
வர்த்தகம் , முதலீடு மற்றும் கடல்சார் ஆகியவை இருதரப்பு ஒத்துழைப்பு அபிவிருத்தியாக்க சில பகுதிகளுக்கு தேவைப்படும். என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
"பங்களாதேஷ் சுமார் 30,000 இலங்கையர் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் அங்குள்ள தொழிலாளர் நிலைமைகளில் திருப்தி அடைகிறார்கள். அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள், நாங்கள் அவர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கிறோம், ”
என்று ஜனாதிபதி கூறினார் என ஆரிபுல் இஸ்லாம் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் 28 ஆம் திகதி கொழும்புக்கு வந்த உயர் ஸ்தானிகர் இஸ்லாம், சுய தனிமைப்படுத்தப்பட்ட காலத்தைத் தொடர்ந்து டிசம்பர் 14 ஆம் தேதி தன் கடமைகளை ஏற்றுக்கொண்டார். இவர் தொழில் இராஜதந்திரியான ஆரிபுல் இஸ்லாம்
1998 ல் பங்களாதேஷ் வெளியுறவு சேவையில் இணைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சில்மியா யூசுப்.