திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச் சென்ற MV Eurosun கப்பல், இராவணன் கோட்டைக்கு அருகிலுள்ள கடல் பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
கப்பலின் மீட்புப் பணிகளுக்காக இரண்டு படகுகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா குறிப்பிட்டார்.
விபத்திற்குள்ளான கப்பலில் 18 பேர் உள்ளதாகவும், குறித்த கப்பல் 10 மீட்டர் ஆழத்திற்கு சென்றுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் கூறியுள்ளமை குறிப்பிடதக்கது.
லைபீரியாவிற்கு சொந்தமான கப்பல் அபுதாபியிலிருந்து திருகோணமலைக்கு சீமெந்து ஏற்றிச்சென்ற போதே ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

