நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் நீதிமன்ற கட்டிடத் தொகுதியின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு இன்று (25) திங்கட்கிழமை ஹல்ஸ்டெரபில் உள்ள நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது. 

காலனித்துவ காலத்தில் கட்டப்பட்ட அளுத்கடை நீதிமன்ற கட்டிடத் தொகுதிக்கு பதிலாக கட்டப்படும் புதிய நீதிமன்ற வளாகம் 06 ஏக்கர் பரப்பளவில் நிர்மாணிக்கப்படுவதுடன், மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கான செலவு 16,500 மில்லியன் ரூபாயாகும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாக கலந்துகொண்டன இந்த நிகழ்வில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த சீ ஜயசூரிய, அமைச்சர்களான அலி சப்ரி, பந்துல குணவர்தன, காமினி லொகுகே, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே, சாகர காரியவசம், சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, மேல் மாகாண ஆளுநர் ரொஷான் குணதிலக, நீதி அமைச்சின் செயலாளர் எம்.கே.மாயாதுன்னே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.