கொவிட்19 தொற்றாளர்களில் அதிகமானோர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர் என கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினம் 223 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதுடன், கம்பஹா மாவட்டத்தில்119 பேரும், களுத்துறையில் 112 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் மேல் மாகாணத்தில் கொவிட் தொற்று அதிகம் பரவலடைந்து வருவதுடன் நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,715 ஆக கடந்துள்ளது.

