நாளை அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் நீக்கம்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சில பகுதிகள் நாளை (23) அதிகாலை 5.00 மணி முதல் விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தின் பொறளை, வெல்லம்பிட்டி, கொழும்பு கோட்டை மற்றும் கொம்பனித் தெரு ஆகிய பகுதிகள் விடுவிக்கப்படவுள்ளன.
இத்துடன் , கம்பஹா மாவட்டத்தின் ஜா-எல மற்றும் கடவத்தை ஆகிய பிரதேசங்களும் நாளை அதிகாலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

