திங்கள் முதல் அனைத்து பயணிகள் போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு - தொற்று ஏற்பட்டால் இழப்பீடும் வழங்கப்படும்!
இலங்கை போக்குவரத்து சபை அறிமுகப்படுத்தியுள்ள கொவிட் 19 பாதுகாப்பு நிதியத்தின் மூலம் அரச பேரூந்தில் பயணிக்கும் ஒருவருக்கு தொற்று ஏற்பாட்டால் 10,000 ரூபாவும் தொற்றினால் மரணமடைந்தால் 50,000/- ரூபாவும் இழப்பீடாக வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது .
இ.போ.சபைக்கு சொந்தமான பாஸ்களில் பயணிக்கும் சகல பயணிகளிடமிருந்து அறவிடப்படும் பேரூந்து கட்டணத்திலிருந்து ( ஒரு ) 1ரூபாய் கொவிட் 19 பாதுகாப்பு நிதியத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக இ.போ.ச தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்க கடந்த வாரம் அறிவித்திருந்தார் .
இ . போ . சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த பின்னர் நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவருக்கு கொவிட் 19 பாதுகாப்பு நிதியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்ட்ட நிதியத்திலிருந்து இழப்பீட்டை பெற்றுகொள்ள முடியும் .
இவ் பஸ்ஸில் பயணித்த பின்னர் கொரோனா தொற்றுடையவராக அடையாளங் காணப்படும் நபரொருவருக்கு இழப்பீடு 10, 000/- ரூபாவும் தொற்றின் மூலம் மரணமடைந்தால் இழப்பீடாக 50 ,000/- ரூபாவும் வழங்கப்படும் .
குறித்த இழப்பீட்டை பெற்றுக்கொள்வதற்கு பயணிகள் பஸ் கட்டணத்தை செலுத்திய பற்றுச்சீட்டை தம்வசம் வைத்திருப்பது அவசியமாகும் .
கொவிட் 19 தடுப்பு செயலணி இ . போ . ச . சுகாதார அதிகாரிகள் மற்றும் வைத்தியர் உறுதிப்படுத்திய பின்னரே இவ் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
இ . போ . சபைக்குச் சொந்தமான பஸ்ஸில் பயணிப்பவர்கள் தொடர்பான விபாரங்கள் சேகரிக்கப்பட்டு வாருகின்றது .
பற்றுச்சீட்டை தம்வசம் வைத்திருப்பதும் அவசியமாகும் .

