சம்மாந்துறை ஆதார வைத்திசாலை கண் சிகிச்சைப் பிரிவுக்கு பத்து இலட்சம் ரூபா பெறுமதியான கண் சிகிச்சை உபகரணம் அன்பளிப்பு!
அண்மையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை கண் சிகிச்சைப் பிரிவுக்கு பத்து இலட்சம் ரூபா பெறுமதியான கண் சிகிச்சை உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது.
சம்மாந்துறை லயன்ஸ் கழக உறுப்பினர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் இணைந்து இந்த உபகரணத்தை சம்மாந்துறை ஆதார வைத்திசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி அஸாத் ஹனிபா அவர்களிடம் கைளித்தனர்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கு. சுகுணன் பிரதம அதிதியாகக் கொண்டார். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கண் சத்திர சிகிச்சை விசேட நிபுணர் அமில ஜயரத்தன,லயன்ஸ் கழக பிராந்திய தவிசாளர் தினுக, அதன் தலைவர் சட்டத்தரணி பெளஸான், நிறைவேற்று உறுப்பினர்களான சமூக சேவையாளர் நபீல், றாபி, ஆகியோர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

