பொது போக்குவரத்தில் பயணிப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு!
பொது போக்குவரத்தை பயன்படுத்தும்போது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் இலக்கங்களை குறித்துக்கொள்ளுமாறு பயணிகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன்மூலம் குறித்த வாகன சாரதிகளுக்கும் தொற்று குறித்து எச்சரிக்கை விடுக்க முடியும் என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

