கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையங்களில் 168 படுக்கைகள் மாத்திரமே

கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையங்களில் 168 படுக்கைகள் மாத்திரமே உள்ளதாக அறிவிப்பு

இலங்கையில் உள்ள 12  கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையங்களில் மொத்தம் 168 படுக்கைகள் மாத்திரமே உள்ளன என்று கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம்  (NOCPC) தெரிவித்துள்ளது.

மினுவங்கொடையில் புதிய கொரோனா தொற்றாளர்கள் அதிகம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1,544 படுக்கைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.


இதேநேரம் மினிவங்கொட கொத்தணியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் எவரும் இதுவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐ.சி.யூ) அனுமதிக்கப்படவில்லை என்றும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், கொவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் திறனை அதிகரிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.