பாராளுமன்ற உறுப்பினர் அமிர்தலிங்கம் திலீபன்
இலங்கை ஜனநாயக சோசலிசக்குடியரசின் யாப்புக்கு முரனான கோரிக்கையான “தனி நாடு, அதாவது தமிழ் ஈழம் வேண்டும்” என்ற கோரிக்கை இல்லாத வேறு 5 கோரிக்கைகளை முன்னிறுத்தி அமிர்தலிங்கம் திலீபன் அவர்களால் 1897 செப்பம்பர் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரக போராட்டம் அன்றைய தமிழீல விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிராபகரனுக்கும் பிடித்திருக்கவில்லை ஆனாலும் அவரிடம் அடம்பிடித்து அனுமதி பெற்று செய்த அந்த மாபெறும் வரவேற்பை பெற்று அந்த சத்தியாக்கிரக போராட்டம் இலங்கை அரசுக்கும் இந்திய அரசுக்கும் பெறும் தலையிடியை கொடுத்தது.
ஆனாலும் அந்த 5 கோரிக்கைகளையும் இலங்கை அரசிடம் முன்வைக்காமல், அமிர்தலிங்கம் திலீபன் இந்திய அரசிடமே அவற்றை முன்வைத்தார் காரணம் இந்திய அரசு இலங்கை அரசின் மீது கொண்ட தாக்கமும் அதன் மூலமாக அழுத்தங்களை கொடுத்து சாதிக்கும் என்ற நம்பிக்கையும் தான்.
அதன் படியே 1987 செப்டம்பர் 22ஆம் திகதி பலாளி விமானநிலையத்திற்கு வந்திரங்கிய இந்திய உயர் ஸ்தானிகர் ஜே. என். டிக்சிட் தமிழ் மக்களின் நலனை அடிப்படையாக்கொண்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து சத்தியாக்கிரக போராட்டத்தில் இருக்கும் அமிர்தலிங்கம் திலீபன் அவர்களை சந்திக்க முன்பு அவரின் தலைவரும் தமிழீல விடுதலைப்புலிகளின் தலைவருமான பிராபாகரனை சந்திக்கின்றார், உடனே திலீபனை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றது. திலீபனும் டிக்சிட்டும் சந்தித்துக்கொள்கிறார்கள், 5 கோரிக்கைகளையும் அரசோடு பேசி அவற்றுக்கான முறையான தீர்வுகளை பெற்றுத்தருகின்றேன் என்று டிச்சிட் சொன்னதும் அங்கு சத்தியாக்கிரக போராட்டம் டிச்சிட்டின் கையாலேயே நீர் கொடுத்து முடித்து வைக்கப்படுகிறது.
உரிமைகளை பெற்றெடுக்க ஆயுதமே சிறந்த வழி என்று தமிழீல விடுதலைப்புலிகளின் தலைமை சிந்தித்த போது, இல்லை காந்தியின் அகிம்சையால் அவற்றை இலகுவாக பெற்றுவிடலாம் என்று தலைமைக்கு சவாலாக பேசி அவற்றை வென்றெடுத்த மக்கள் விரும்பும் தலைமையாக மாறினார் திலீபன், காலப்போக்கில் இலங்கை அரசும் இந்திய அரசும் வேலுப்பிள்ளை பிரபாகரனை தமிழ் மக்களின் சார்பாக பேச்சுவார்த்தைக்கு அழைக்காமல் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ள திலீபனை பேச்சுவார்த்தைக்கு அழைக்கத் தொடங்கியது, 23 வயது கொண்ட திலீபனின் நகர்வுகள் சாணக்கியமான நகர்வுகளாகவும் மக்கள் உரிமைகளை இலகுவாக பேச்சுவார்த்தை மூலம் பெற்றுக்கொள்வதாகவும் இருந்தது, இதன் மூலம் மக்கள் மத்தியில் பிராபகரனுக்கு இருந்த செல்வாக்கு குறைந்து கொண்டு சென்றது எனலாம்.
அதன் பின் தமிழீல விடுதலை புலிகள் இயக்கம், அரசியல் கட்சியாக மாறி அதற்கு தலைவராக திலீபன் செய்ல்பட ஆரம்பித்தார், தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாப்பதையும், அவர்களுக்குரிய சலுகைகளையும் அதிகாரங்களையும் மற்றும் தமிழ் மக்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதையும் அரசியல் நீரோடையில் நின்று இலங்கை யாப்பிற்கு ஏற்றவாரே சாதித்து காட்டினார் திலீபன்.
இப்படி ஆயுதம் இன்றி பயணித்த திலீபனின் உரிமை போராட்டம் அனைத்து இன மக்கள் மத்தியிலும் வலுப்பெற்றது, தமிழ் இனம் என்பதை தாண்டி மனிதத்துக்காக குரல் கொடுக்கும் ஒரு தலைவனாக மாறினான் திலீபன். ஜனநாயக ரீதியில் உரிமைகளை வென்றெடுக்க திலீபன் தேர்தல்களில் களமிறங்கி வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார், அங்கு நாட்டுக்குத்தேவையான பல திட்டங்களை முன்வைத்து தேசிய அரசியலில் முக்கிய இடத்தை பெற்றுக்கொண்டார், ஆளும் அரசில் அமைச்சராக மாறி தமிழ் மக்களுக்கு மட்டும் அல்லாமல் எல்லோருக்கும் சேவைகளை அள்ளிக்கொடுத்தார் திலீபன்.
என்னதான் மக்களின் தலைவன் என்று எல்லோரும் பேசினாலும், திலீபனின் தங்கத் தலைவன் வேலுப்பிள்ளை பிராபகரன் என்று அவர் எங்கும் சொல்ல மறந்தது கிடைதாது. இப்படிப்பட்ட ஒரு திலீபனை பின்பற்றி ஜனாநாயக முறையில் ஆயுதமின்றி மக்களுக்கான உரிமைகளை பெற்றெடுக்க பலர் இன்று வளர்ந்து வருகின்றார்கள்.
இப்படிப்பட்ட ஒரு வரலாற்றை படிக்க வேண்டிய இத் தினத்தில், “திலீபன் இறந்த தினத்தை கொண்டாட அனுமதி கிடையாது” என்று நாளிதலில் வாசித்த போது மிகக்கவலையாக இருந்தது. அன்று வேலுபிள்ளை பிரபாகரன் இந்திய உயர் ஸ்தானிகர் ஜே. என். டிக்சிட் அவர்கள் திலீபனை சந்திக்க அனுமதிகொடுத்திருந்தால் நான் எழுதியிருக்கும் இந்த வரலாறு உண்மையாகியிருக்குமோ என்னமோ?
மரணம் என்றாலே மர்மம் தான், அதிலும் அரசியல் களத்தில் மரணம் என்பது மாய மர்மம் என்பதை எல்லோரும் புரிந்துகொள்ளவே வேண்டும்.
எஸ்.எம்.இஷாம் மரிக்கார்
புத்தளம்


