நிருபர் :- பௌசுல் அலீம்.
கொவிட்19 மீண்டும் தலைதூக்கியதன் காரணமாக "தட்டுத் தாவாரம்" நூல் வெளியீட்டு விழா மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஈழத்து நூன் எம் ஏ எம் நிலாம் எழுதிய "தட்டுத் தாவாரம் கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை 9ஆம் திகதி ஆனந்த குமாரசாமி மாவத்தை. கொழும்பு -07 புதிய நகர மண்டபத்தில் வெளியிடப்பட இருந்தது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவல் காரணமாக நூல் வெளியீட்டு விழா மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நிலைமை வழமைக்கு திரும்பியதன் பின்னர் புதிய திகதி அறிவிக்கப்படும் எனவும் இதனை அனைவரும் கவனத்தில் கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் செயலாளர் சாதிக் சிஹான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

