Eclat unites - srilanka எனும் சமூக சேவை அமைப்பினால் 50 வது வேலைத்திட்டமாக Eclat unites அமைப்பின் தலைவர் Mr. Ihthizan Mohammad அவர்களின் தலைமையில் "உலகலாவிய குடியுரிமை தேசத்தை வளப்படுத்தும் " எனும் தொனிப்பொருளினூடாக ஓர் நேரலை திறந்த பேச்சுப்போட்டி (online public speaking) ஒன்று J.J foundation தலைவர் Doc.I.Y.M Haniff இணைந்து ஏற்பாட்டு செய்யப்பட்டு 13 மாவட்டங்களைச்சேர்ந்த 100 போட்டியாளர்களின் பங்களிப்போடு சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் 5 வயது முதல் 28 வயதான போட்டியாளர்கள் பங்குபற்றியதோடு 35 பாடசாலைகளும்,7பல்கலைக்கழகங்களும் பங்கு பற்றியமை குறிப்பிடத்தக்கது.இம்மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா மத்திய மாகாண ஆளுநர் மதிப்பிற்குரிய Mr.lalith U.Gamage என்பவரின் தலைமையின் கீழ் "ஸ்ரீ புஷ்பதான அமைப்பு" (sri pushpadana society) மண்டபத்தில் 2020.09.20 அன்று மதியம் 1.00 முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற்றது.விஷேட அதிதிகளாக மாவட்ட பனிப்பாளர் Mr.Thissa karnarathna. District secretary - kandy (GA) , கண்டி மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் பனிப்பாளர் Mrs.Kumuthini Vithana (Human Rights Regional Officer Kandy) , கண்டி பொலிஸ் மா அதிபர் Mr.Sanjeewa Darmaratna (senior DIG - Kandy) மற்றும் அகில இலங்கை YMMA தலைவர் Mr.Saheed M.Rismy (National President ACYMMAC) கலந்து சிறப்பித்ததோடு பங்கு பற்றிய மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்களும்,சான்றிதழ்களும்,ஞாபகார்த்த சின்னமும் வழங்கப்பட்டதோடு முதலாம்,இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கி உற்ஷாகப்படுத்தப்பட்டது.




