பாடசாலைகளில் வறுமைக் கோட்டின் கீழ் கல்வி பயிலும் பெண் பிள்ளைகள் எதிர்நோக்கும் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாக புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுப்பு

 பாடசாலைகளில் வறுமைக் கோட்டின் கீழ் கல்வி பயிலும் பெண் பிள்ளைகள் எதிர்நோக்கும் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாக புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது...!




கலாநிதி வி. ஜனகனின் சுத்தமான கொழும்பு திடடத்தின் கீழ் ஆசிரியை மற்றும் உளவள ஆலோசகர் மயிலேந்திரன் உஷா பாரதியின் எண்ணக்கருவில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பமாகவுள்ளது.

இது குறித்த முதற்கட்டக் கலந்துரையாடல் அண்மையில் கலாநிதி வி. ஜனகனுடன் இடம்பெற்றது. இவ்வாறான பிரச்னைகளின் காரணமாக பாடசாலைகளில் கல்வி பயிலும் பெண் பிள்ளைகளின் வரவு மிகக் குறைவானதாகவும் மாணவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதால் அதனை வாங்கும் வசதி இல்லாததால் உளவியல் ரீதியில் பல பிரச்சினைகளை சந்தித்து வருவதாக இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 

அதேவேளை இந்தப் பிரசசி;னைக்குத் தீர்வு காணப்படும் போது எதிர்காலத்தில் மாணவர்களின் உடல் உள ரீதியில் பாதுகாப்பு கிடைக்கும் என்றும் முதற்கட்டமாக கொழும்பு கலைமகள் வித்தியாலயத்தில் ஆரம்பமாகும் என்றும் இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் முதற்கட்டமாக கொழும்பிலுள்ள அனைத்து பாடசாலைகளினூடாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.