தனி நபரொருவரால் கொள்வனவு செய்யக்கூடிய அதிகபட்ச சிம் கார்ட்களை பாவிப்பது தொடர்பில் புதுச்சட்டம்!

தனி நபர் ஒருவரால் கொள்வனவு செய்யக்கூடிய சிம் கார்டுகளின் எண்ணிக்கையில் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த பாதுகாப்பு அமைச்சு முடிவு செய்துள்ளது.



இதன்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக எதிர்காலத்தில் தனி நபர் ஒருவரது பெயரில் மொத்தம் ஐந்து சிம் கார்டுகளை மாத்திரமே வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்.


மற்றொரு நபரின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சிம் கார்டுகளின் மூலம் வேறொருவரினால் மேற்கொள்ளப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பிற மோசடிகளை நிவர்த்தி செய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


கடந்த காலத்தில், சிம் கார்டுகளை வாங்குவதற்கும் விற்பனை செய்வதற்கும் பயன்படுத்தப்பட்ட 1000 க்கும் மேற்பட்ட தேசிய அடையாள அட்டைகளின் பிரதிகளுடன் ஒரு நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tags

Post a Comment

2 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.