தோப்பூர் பிரதேச குடிநீர் பிரச்சினைக்கு எதிர்வரும் புதிய பஜ்ஜட் ஊடாக தீர்வு

சேர்ஃப்-லங்கா(NGO), ஜவாஸன் குறூப் (Company) ஆகிய நிறுவனங்களின் ஸ்தாபகரும் கொழும்பு ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக பொறியியலாளருமான இஹ்ஸான் ஜவாஸன்  செப்டம்பர்-3 ஆம் திகதி வியாழக்கிழமை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின்
தலைமை காரியாலயத்தில் தோப்பூர் பிரதேச குடிநீர் பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினார்.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை செயலாளர், தவிசாளரின் PA விஷாகா உட்பட தவிசாளரின் அலுவலக அதிகாரிகள் மற்றும் சில உயர் அதிகாரிகளுடன் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் இடையே கிழக்கு மாகாண தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் Eng.வாசுதேவன்(AGM) உடன் தலைமை காரியாலய அதிகாரிகள் தொலைபேசியூடாக தோப்பூர் பிரதேச குடிநீர் பிரச்சினை தொடர்பாக கேட்டறிந்தனர்.

அத்துடன் Eng.இஹ்ஸான் ஜவாஸன் உடன் தொலைபேசி தொடர்பை ஏற்படுத்திய Eng.வாசுதேவன்(AGM) தோப்பூர் குடிநீர் பிரச்சினை எவ்வாறு ஏற்பட்டது என்ற காரணத்தை விபரித்ததுடன் திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பாக உள்ள ஜயந்தன் அவர்களின் தொலைபேசி இலக்கத்தை வழங்கி இப்பிரச்சினை தொடர்பாக உங்களது மேலதிக அறிக்கையினை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.