இலங்கைச் சுற்றுலாத் துறையை மேலும் உயர்தரத்திற்கு வளர்த்துச் செல்வதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.

 இலங்கைச் சுற்றுலாத் துறையை மேலும் உயர்தரத்திற்கு வளர்த்துச் செல்வதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.


மேலும், “இந்து சமுத்திரத்தின் முத்து எனப்படும் நமது தாய்நாடானது அதன் சூழலியல் பன்முகத்தன்மை, எமது உயர் பண்பாட்டு விழுமியங்கள் மற்றும் எமது பெருமைமிக்க வரலாறு ஆகியவற்றைக் கொண்டு உலகச் சுற்றுலாப் பயணிகளை நீண்ட காலமாக ஈர்த்துவந்துள்ளது.

இவற்றுக்கு எல்லாம் மேலானதா, வேற்று நாட்டவர்களைக் கவரும் எமது உயரிய தரம் ஆனது - எமது விருந்தோம்பல் பண்பு என்றே நான் கருதுகின்றேன். அதுவே எம் மீது அடுத்தவர்களுக்கு மதிப்பையும் ஏற்படுத்துகின்றது.

அண்மையில் - கொரோனா அச்சுறுத்தலால், தத்தமது சொந்த நாடுகளுக்குத் திரும்ப முடியாது இங்கு சிக்கித் தவித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கையர்கள் விருந்தோம்பி பராமரித்த முறையானது - அனைத்துலக ஊடகங்களில் பெரிதும் போற்றுதலுக்கு உள்ளாகியிருந்தமை ஒரு பெருமைக்குரிய விடயம் ஆகும்.

எதிர்காலத்தில், புதிய உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் - ஏற்கெனவே பாராட்டுதலுக்கு உள்ளாகியிருக்கும் இலங்கைச் சுற்றுலாத் துறையை மேலும் உயர்தரத்திற்கு வளர்த்துச் செல்வதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.