கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்தவரின் இறுதி கிரிகை மாதம்பையில்

கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்தவரின் இறுதி கிரிகை மாதம்பையில்


கொரோனா தொற்றின் காரணமாக மரணமடைந்தவரின் இறுதி கிரிகைள் சிலாபம் மாதம்பையில் நேற்று இடம்பெற்றது.

இலங்கையில் கொவிட்-19 தொற்றுக்குப் பலியான 13வது நபர் இவராவார். பஹ்ரெய்னில் இருந்து இலங்கை வந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த 60 வயதான முதியவரே நோய்க்குப் பலியானார். இவர் நுகேகொடயைச் சேர்ந்தவர். கப்பலில் மாலுமியாக பணியாற்றியவர்.
இலங்கையில் கொவிட்-19 உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3262 ஆகும். இவர்களுள் 3005 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
மொத்தமாக 244 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஆகக்கூடுதலான தொற்றாளர்களைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு 67 இலட்சத்து 47 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 49 இலட்சத்து 26 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கும், பிரேசிலில் 43 இலட்சத்து 49 ஆயிரத்திற்கு மேற்பட்டோருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவில் ஆயிரத்து 54 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.