தூதரகங்களில் உள்ள தொழிலாளர்கள் நலன் பேணும் பிரிவை நீக்க அரசு முயற்சி -இம்ரான் மகரூப்.


தூதரகங்களில் உள்ள தொழிலாளர்கள் நலன் பேணும் பிரிவை நீக்க அரசு முயற்சி - இம்ரான் மகரூப்.


தூதரகங்களில் உள்ள தொழிலாளர் நலன்பேணும் பிரிவை நீக்க அரசு முயற்சிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். நேற்று வியாழக்கிழமை (பாராளுமன்றத்தில் இடம் பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
கொரோனா பற்றி பேசும்போது எமது தேசிய வருமானத்தில் பெரும் பங்காற்றும் வெளிநாட்டு பணியாளர்களை நாம் மறக்க முடியாது. நாட்டின் பொருளாதரத்துக்கு முதுகெலும்பு போல் இருக்கும்  சவூதி - குவைத் - கட்டார் - எமிரேட்ஸ் - பஹ்ரைன்  போன்ற மத்திய கிழக்கு பணியாளர்கள் நிலையை நான் இச்சபையின் அவதானத்துக்கு கொண்டு வர விரும்புகின்றேன்.
தற்போதைய கொரோனா நிலையில் மத்திய கிழக்கில் வாழும் எமது தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர் கொண்டுள்ளார்கள். தொழில் இன்மை, சாப்பாடின்மை, நோய் மற்றும் தொழில் காலம் முடிவடைந்தமை போன்ற துன்பங்களை எதிர் கொண்டுள்ளனர்.
இவர்களின் விடயத்தில் அரசாங்கம் பாராமுகமாக இருக்கிறது. வசதியுள்ளவர்கள் நாட்டுக்கு திரும்புவதற்கான திட்டங்களை மட்டுமே அரசாங்கம் நடைமுறைப்படுத்துகின்றது. அத்தோடு வெளிநாட்டு தொழிலாளர்களின் நலன் பேணும் பிரிவை அந்நாட்டு தூதரகங்களிலிருந்து நீக்கவும் முடிவுசெய்துள்ளது.
இதனை சவூதி அரேபியாவின் ரியாத் தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராக  பணிபுரியும் ஒரு ஊழியர் (இஸ்மத் அலி) கடந்த சில நாட்களுக்கு முன் ஜனாதிபதிக்கு ஒரு பகிரங்க கடிதத்தின் மூலம் உணர்த்தி இருந்தார். அந்தக் கடிதத்தை இங்கே சமர்ப்பிக்க விரும்புகின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.