மதுரையில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்

மதுரையில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்
 
மதுரையில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த போலீசார் 10 பேரை கைது செய்தனர்.

மதுரை மீனாட்சி பஜாரில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்துகொண்டிருந்த கருணாமூர்த்தி என்பவரை பிடித்து சோதனையிட்டதில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள பிரேசில் நாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அவரிடம் விசாரணை நடத்தியதில் சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்து வந்தது தெரிய வந்தது. அதனைத்தொடர்ந்து அவர் கொடுத்த தகவலின்பேரில் ராஜேந்திரன், மகாலட்சுமி உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும் பணப்பரிமாற்றத்தில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.