நாட்டின் 13ஆவது பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகையில் இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 9ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் களனி ரஜமஹா விகாரையில் பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டமையை அடுத்து இன்று பிரதமர் உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

