என் வீடு மரணத்தின் வாசல்


 உலகம் போற்றும் ஜாதியடா நாம்

 பரிதாபம் சுமந்த பாவியடா நாம்

 பல திறமை கொண்ட வம்சமடா நாம்

 எந்த வாய்ப்புமே கிடைக்காத ஏமாலியடா நாம்

 புன்னகைப்பதை கற்றுத்தரும் புத்தகமடா நாம்

 புரட்டி படித்தால் வெறும் குப்பையடா நாம்

 பசித்திருந்து பழகி விட்டோம் நாம்

 கனவுகளை களைத்து விட்டோம் நாம்

 உள்ளுக்குள் உடைந்திருப்போம் நாம்

 அது போல பிறர் துன்பமும் உணர்ந்திருப்போம் நாம்

 வலியும் கண்ணீரை துடைத்துடுவோம் நாம்

 ஒரு துளி தன்னிருக்காய் தவித்திடுவோம் நாம்

 நம் கஷ்டத்தை எவரும் அறியவில்லையாம்

 மாடி கட்டடங்கள் அதை மறைத்து விட்டதாம்

 கட்டு கட்டாய் பணம் வேண்டாம்

 கற்றுக்கொள்ள கல்வி போதும்

 உலகம் போற்ற புகழ் வேண்டாம்

 பசி தீர உணவு போதும்

 அழகூட்டும் ஆவணங்கள் வேண்டாம்

 அங்கம் மறைக்க ஆடை ஒன்று போதும்

 காணும் கனவுகளை நிஜமாக்க வேண்டாம்

 இருக்கும் திறமைக்கு வாய்ப்பு தந்தால் போதும்

 சொத்து சுகம் வேண்டாம்

 சுதந்திரம் மட்டுமே போதும்
 Article Ziyard 
Tags

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.