கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 771 ஆக குறைகிறது; வெளியானது திடுக்கிடும் செய்தி.
இராஜகிரியவிலிலும் கொலன்னாவையிலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக நேற்றையதினம் (05) அடையாளம் காணப்பட்ட இருவருக்கும் தேசிய வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இன்று (06) இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலிருந்து இவர்களின் பெயர்களை நீக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 771 ஆக குறைந்துள்ளது.

