கடந்த 2019.11.27 ம் திகதி மவுன்ட் ஹிரா சர்வதேச பாலர் பாடசாலையின் வருடாந்த கலை விழா நிகழ்வு பணிப்பாளர் திரு ஸாஹித் மற்றும் அதிபர் திருமதி நாஷிதா நவ்ஃபல் ஆகியோரின் தலைமையின் கீழ், பாணந்துறை ஹேனமுல்லை உம்முல் மலீஹா கேட்போர் கூடத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது .
இதில் விசேட அதிதியாக வளவாளர் திரு "ஸாபிர் ஹாஷிம்" கலந்து சிறப்பித்து உரையாற்றிய தோடு திறமைகள் வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி, ஒன்றிணைந்து செயற்பட்ட ஆசிரியர் குழாத்துக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். பார்வையாளர்களின் உள்ளம் கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் அன்றையதினம் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது





