சமூக வலைத்தளத்தில் தவறான தகவல்களை பரிமாறும் முன் ஒரு நிமிடம் சிந்திப்போம்..

Writer
Silmiya Yousuf
இன்று சமூகவலையத்தளத்தின் வளர்ச்சி மிகவும்  ஒரு பாரிய முன்னேற்றத்தை  அடைந்துள்ளது.
இதனால்  உலகமே கைக்குள் சுருங்கி காணப்படுகிறது.

மனிதர்களது நேரங்களும், காலங்களும் , பொழுது போக்குகளும் இந்த சமூகவலைத்தளத்தினூடாகவே கடத்தப்படுகிறது என்பதை  நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஒரு சம்பவம் நடக்கும் போது அதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு இன்று சமூக வலைத்தளமே முன்னிலையில் காணப்படுகிறது.

இவற்றால் தகவல்களை பரிமாற்றிக் கொள்ளல்,
செய்திகளை பதிவேற்றல் போன்றவை உடனுக்குடனே நிகழ்கிறது..

இதன் மூலம் எத்தகைய சரி பார்ப்பும், உருதிப்படுத்தலுமின்றி  உடனடியாக பகிரப்படுகின்ற தகவல் இறுதியில் போலியான தகவலினால் மக்களும் தவறாக புரிந்து கொண்டு இதனால் பாதிப்படைகின்றனர்.

நாம் சமூக வலையத்தளத்தில்  பதிவேற்றும் ஒரு தகவலாக இருந்தாலும் சரி, செய்தியாக இருந்தாலும் சரி, தனிப்பட்ட சம்பவம் கொண்ட விடயமாக இருந்தாலும் சரி இவைகள் மக்கள் மத்தியிலேயே இலகுவான முறையில் பரப்பப்பட்டு இதனால் பல பாதிப்புக்கள் எம்மை அறியாமல் வந்தடையக்கூடிய நிலமையை சமூகவலையத்தளமான (Social Media) இன்று உருவாக்க கூடிய சக்தி வாய்ந்தது.

தவறான தகவல்களினால், பல முரண்பாடுகள், பிரச்சினைகள், ஏமாற்றங்கள் , மன உளைச்சல் போன்றவற்றால் பல சவால்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகின்றனர்.

எனவே சமூகவலையத்தளத்தில் இருக்கும் நாம் சரியான முறையில் தகவல்களை சரிபார்த்து உறுதிப்படுத்தி நம்பகத்தன்மையான பயனுள்ள விடயங்களை பகிர்ந்து பிரயோசனமடைவோம்..
     
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.