பெல்ட் மற்றும் சாலை முன் முயற்சியின் கீழ் இலங்கையும் சீனாவும் தெற்காசியாவில் மிகப்பெரிய தொலைக்காட்சி கோபுரத்தை உருவாக்க தாமரைகோபுரம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
சீன தேசிய மின்னணு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கார்ப்பரேஷன் (CEIEC)பொது ஒப்பந்தக்காரராக இருந்து நிர்மானப்பணிகளை 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் வெற்றிகரமாக முடித்துள்ளது.
இங்கு நட்சத்திர விடுதி,ஹோட்டல்கள்,ஒரு வணிக வளாகம்,ஒரு மாநாட்டு மண்டபம்,அருங்காட்சியகம் உட்பட இன்னும் பல வசதிகள் உள்ளன.
இந்த கோபுரத்திற்குள் நுழைவதற்கு 30600 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட நான்கு வாயில்கள் காணப்படுகின்றன.இனி இலங்கை .இந்த கோபுரம் மூலமாகவே உலகம் முழுவதும் அடையாளமாகவுள்ளது.

