வட்ஸ் அப் App விண்டோஸ் ஸ்டோரில் இருந்து நீக்கம்

வட்ஸ்அப் செயலி விண்டோஸ் மற்றும் குறிப்பிட்ட அண்ட்ராய்டு இயங்குதளங்களில் இனி இயங்காது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதன் முதற்கட்டமாக தற்போது விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வட்ஸ்அப் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வட்ஸ்அப் நிறுவனம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், இவ்வாண்டு டிசம்பர் மாதத்திற்குப் பிறகு விண்டோஸ் இயங்குதளத்தில் வட்ஸ்அப் வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் விண்டோஸ் பயனாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்த நடவடிக்கையின் முதற்கட்டமாக இன்று (ஜூலை 1) முதல் விண்டோஸ் ஸ்டோரில் இருந்து வட்ஸ்அப் செயலி நீக்கம் செய்யப்படுகிறது. இதனால், இனி வட்ஸ்அப்பை விண்டோஸ் மொபைல்களில் டவுன்லோட் செய்ய முடியாது. ஏற்கனவே, விண்டோஸ் மொபைலில் வாட்ஸ்அப் இருந்தால், அதுவும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு இயங்காது.

மேலும், அண்ட்ரோய்ட் 2.3.7 மற்றும் iOS 7 இயங்குதளத்தில் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வட்ஸ்அப் இயங்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வட்ஸ்அப்பின், சமீபத்திய கேள்வி பதில்கள் (FAQ) பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த இயங்குதளத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் மூலமாக புதிதாக வட்ஸ்அப் கணக்கு எதுவும் தொடங்க முடியாது. ஏற்கனவே, வட்ஸ்அப் இருக்கும் பட்சத்தில், அதுவும் வேலை செய்யாது.

பயனாளர்கள் ஸ்மார்ட்போன் செட்டிங்ஸ் பகுதிக்குள் சென்று, தங்களுடைய போன் எந்த வெர்ஷனில் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம். இதற்கு Settings பிரிவுக்குள் சென்று Phone>About என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில், ஸ்மார்ட்போன் எந்த இயங்குதளத்தில் இயங்குகிறது என்பது காட்டப்படும். அண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷன் இருந்தால், அந்த போனில் அடுத்த வருடம் வட்ஸ்அப் வேலை செய்யாது.

அண்ட்ராய்டு 4.03 வெர்ஷன் அல்லது அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட்போனில் தான் வருங்காலத்தில் வட்ஸ்அப் வேலை செய்யும். வட்ஸ்அப்பை புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.