ஹஸ்பர்
திருகோணமலை,தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் கணக்காய்வு முகாமைத்துவக் குழு கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் இன்று (14) இடம் பெற்ற குறித்த 4ஆவது காலாண்டுக்கான(2022) கூட்டத்தில் வெளிக்கள உத்தியோகத்தர்கள் உட்பட பல வேலைத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்தாலோசிக்கப்பட்டன.
குறித்த கணக்காய்வு முகாமைத்துவ குழு கூட்டத்தில் மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஏ.எல்.மஹ்ரூப் மற்றும் தேசிய கணக்காய்வு அத்தியட்சகர் வை.B.நிசார் ஆகியோர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை நடாத்தினர்.