தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தாருக்கு சேவைநலன் பாராட்டு விழா


நூருல் ஹுதா உமர்

கடந்த வியாழக்கிழமை (09.02.2023) முதல் அரச பணியிலிருந்து ஓய்வுபெறும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் அவர்களுக்கு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வேலைகள் மற்றும் பராமரிப்புப் பிரிவினரின் ஏற்பாட்டில் சேவைநலன் பாராட்டு விழா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஏ. றமீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் விசேட அதிதிகளாக நிதியாளர் மங்கள வன்னியாராச்சி மற்றும் பிரதிப் பதிவாளர்களான எம்.ஐ. நவ்பர் மற்றும் திரு.பி.எம்.முபீன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வேலைகள் மற்றும் பராமரிப்புப் பிரிவினரினால் நினைவுச்சின்னங்கள் வழங்கி பதிவாளர் எச்.அப்துல் சத்தார் கௌரவிக்கப்பட்டார்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.