ஐயோசாமிநீஎனக்குவேணாம் பாடலின் ஊடாக உலகின் கவனத்தை ஈர்த்த இசைக்காதலர்களுக்கு திருமணம்.


பாடலாசிரியர் அஸ்மின் 

ஐயோசாமிநீஎனக்குவேணாம் பாடலின் ஊடாக உலகின் கவனத்தை ஈர்த்த இசைக்காதலர்கள் சனுக்க விக்கிரமசிங்க, வின்டிகுணதிலக இன்று திருமணவாழ்வில் இணைகின்றனர் .

இன்று வின்டி குணதிலக்க பிறந்த நாளில் திருமண நாளும் அமைந்தமை சிறப்பம்சம்.

இலங்கையின் புகழ்பூத்த இசைக்குடும்பத்தில் பிறந்த இருவரும் இன்னும் பல சாதனைகள் புரிந்து சகலமும் பெற்று வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள். தனியாக அடுத்த ஆண்டு சனுக்க இசையில் நான் எழுதிய  இரண்டு பாடல்கள் வெளியாகவுள்ளன.அதில் ஒருபாடலை சனுக்க பாடுகின்றார்.காதலியிடம் தோற்ற காதலர்களுக்கு ஆறுதல் தரும் பாடலாக அப்பாடல் நிச்சயம் அமையும். இரண்டு பாடல்களும் மிகசிறப்பாக வந்துள்ளன. உங்கள் அனைவரையும் கவரும் என்று நம்புகின்றேன்..

இருகரம்பற்றி இணைபிரியாது மனைவாழ்வில் மகிழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

Windy Goonatillake 

Sanuka Wickramasinghe

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.