இந்து சமய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டியில் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கிவைப்பு


ஹஸ்பர்

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த இந்து சமய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் போட்டியில் மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு (23) திருகோணமலை  மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம தலைமையில் நடைபெற்றது.


நற்பண்பு மிக்க சமுதாயமொன்றை கட்டியெழுப்ப அறநெறிப்பாடசாலைகள் வழிசமைக்கின்றது. அத்துடன் அறநெறிப்பாடசாலைகள் மாணவ சமூகத்தை நல்ல பண்புடையவர்களாக மாற்றும் நோக்கில் அளப்பரிய சேவைகளை வழங்குகின்றன. தற்போதைய காலத்தில்  மாணவர்கள், அறநெறி மாணவர்களை மையமாக கொண்டு பல விரும்பத்தகாத செயற்பாடுகள் சூட்சகமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இவற்றிலிருந்து மாணவர்களை பாதுகாக்க அறநெறி ஆசிரியர்களும் தமது வகிபாகத்தை சரியாக வழங்குமாறு இதன்போது அரசாங்க அதிபர் வேண்டிக்கொண்டார்.

அறநெறி பல்துறைசார் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ் மற்றும் பரிசில்கள் அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளால் வழங்கி வைக்கப்படது.

இந்நிகழ்வில் திருகோணமலை சிறீபத்திரகாளி தேவஸ்தானத்தின் பிரதம குரு   பிரம்மஶ்ரீ கலைமாமணி சோ.ரவிச்சந்திர குருக்கள்,  தென்கைலை ஆதீனம் தவத்திரு அகஸ்த்தியர் அடிகளார் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு ஆசியுரைகளையும் வழங்கினர்.

மாவட்ட அரசாங்க அதிபரின் சேவையை பாராட்டும் முகமாக அவருக்கு பொன்னாடை அணிவித்து கெளரவிக்கப்பட்டதுடன் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அரசாங்க அதிபருக்கு புத்தபெருமானின் உருவச்சிலையும்  கையளிக்கப்பட்டது.

மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ். பரமேஸ்வரன்,தம்பலகாகமம் உதவி பிரதேச செயலாளர்,மாவட்ட செயலக இந்து சமய கலாசார உத்தியோகத்தர் இலக்குமிதேவி சிறீதரன்,அறநெறி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இதற்கான அனுசரனையினை வழங்கிருந்தது.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.