RUTH ELSA
15 வாரக்குழந்தையை உயிரில்லாமலே ஈன்றெடுத்தால் தாய்....
ஒவ்வொரு தாயும் குழந்தைகளை தவமிருந்தே பெற்றெடுப்பார்கள்..
கருவுற்றதில் இருந்து பிறருக்கும் வரை அவர்கள் எத்தனை வலிகளை தாங்கினாலும் குழந்தை பிறந்து அழுகுரலை காண தாயோ புன்னகையுடன் கையேந்தி நிற்பாள் குழந்தையின் மழலை முகத்தை காண....
ஒரு தாய் குழந்தையை காண முன்னே
ஒரு தாதியாக நானே குழந்தையை அழுகுரலோடு தாயிடம் ஒப்படைப்பேன்.
ஆனால் நேற்று 17ம் திகதி சற்று இதற்கு மாறுதலாகவே இச் சம்பவம் எனக்கு நடைபெற்றது.
அழுகுரலோடு வெளியே வரும் குழந்தை அன்று அழுகுரல் சத்தமின்றி சதைப்பிணமாகவே வெளியே வந்தது...
அந்நொடியே நானோ மெய்மறந்து கிடந்தேன்...
தாயின் முகத்தை சற்று எட்டி பார்க்க அவளோ நினைவன்றி கிடந்தாள்..
கண்ணீரோடு நான் என்னை சாமாதானம் செய்து விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்...
பெண்கள் உடலாலும் சரி மனதாலும் சரி வலிமை மிக்கவர்கள் தான்..
அவள் குழந்தைக்காக இறந்து மீண்டும் பிறக்க அவள் இன்னுமொருமுறை பிரசவிக்க பின்வாங்குவதில்லை....
ஆனால் ஆண்கள் இந்த வலியை உடலாலும் உள்ளத்தாலும் ஒரு போதும் தாங்கவும் மாட்டார்கள், தயாராகவும் மாட்டார்கள்...
எனவே பெண்களே வலிமையானவர்கள், அவர்களை கௌரவியுங்கள்...
நன்றி.