நீங்கள் விளையாடும்போது சம்பாதிக்கலாம் - Traveler Global

 


சில்மியா யூசுப்.

கொழும்பு: புதிய கால்பந்து வீரர்களை ஏற்றுக்கொள்ள Traveler Global FC  நிர்வாகக் குழு முடிவு செய்துள்ளது. குறித்த புதிய கால்பந்து வீரர்களுக்கு இலங்கையில் உள்ள முன்னணி நிறுவனங்களால் பயிற்சி அளிக்கப்பட்டு வேலை வாய்ப்புகளும் அளிக்கப்படவுள்ளன.

"இந்த இளம் திறமையான கால்பந்து வீரர்களின் திறன்களை களத்திலும் களத்திற்கு வெளியிலும் மேம்படுத்துவதே இதன் இலக்காகும்," என Traveler Global நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் Rizmy Reyal, ஒக்டோபர், 14 வெள்ளிக்கிழமை அன்று  ஊடகத்திற்கு தெரிவித்தார்.

Traveler FC தனது கால்பந்து வீரர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளதாகவும் அவர் மேலும்  தெரிவித்தார்.

"கவர்ச்சிகரமான மாதாந்த சம்பளத்துடன், இளம் வீரர்களின்  திறமைகளை வெளிக்காட்ட இது ஒரு சந்தர்ப்பமாகும், 25 வயதுக்குட்பட்ட அனைவரும் விண்ணப்பிக்கலாம்," என மேலும் Traveler Global நிறுவனத்தின் நிர்வாகப் பணிப்பாளர் Rizmy Reyal தெரிவித்தார்

கால்பந்து விளையாடுவதில் ஆர்வமுள்ள அனைவருக்கும் இது ஒரு திறந்த அழைப்பாகும்.

Traveler FC இன் நிர்வாகக் குழு உங்கள் CVயை aroomy@ttgpl.com என்ற மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.